இன்றைய லக்ன நேரங்கள் (Today Lagnam)

தேதி: 15-06-2026 | ஊர்: Thiruvarur
ஊர் (City)
தேதி
நேரம்
🌅சூரிய உதயம்05:49 AM
🌇சூரிய அஸ்தமனம்06:34 PM
தற்போது நடக்கும் லக்னம்
மீனம் லக்னம்
schedule நேரம் கணக்கிடப்படுகிறது...
gps_fixed முழு லக்ன நேரங்கள் அட்டவணை (24 மணிநேரம்)
லக்னம் (Lagnam) தொடங்கும் நேரம் முடியும் நேரம்
கும்பம் இரவு 12:00:00 AM 12:19:41 AM
மீனம் இரவு 12:19:41 AM 02:01:23 AM
மேஷம் இரவு 02:01:23 AM 03:51:07 AM
ரிஷபம் இரவு 03:51:07 AM 05:54:16 AM
மிதுனம் பகல் 05:54:16 AM 08:05:23 AM
கடகம் பகல் 08:05:23 AM 10:13:13 AM
சிம்மம் பகல் 10:13:13 AM 12:14:14 PM
கன்னி பகல் 12:14:14 PM 02:13:48 PM
துலாம் பகல் 02:13:48 PM 04:18:49 PM
விருச்சிகம் பகல் 04:18:49 PM 06:29:49 PM
தனுசு இரவு 06:29:49 PM 08:37:18 PM
மகரம் இரவு 08:37:18 PM 10:32:03 PM
கும்பம் இரவு 10:32:03 PM 11:59:59 PM

இன்றைய லக்ன நேரங்கள் (Indraiya Lagnam)

ஜோதிட சாஸ்திரப்படி சுப காரியங்களைத் தொடங்குவதற்கு மிக முக்கியமான கூறுகளில் ஒன்று லக்னம் (Lagnam) ஆகும். ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் கிழக்கு வானில் உதிக்கும் ராசியே லக்னம் எனப்படும். இந்த Tamil Calendar Today இணையதளத்தில் உங்களின் ஊருக்கான துல்லியமான சூரிய உதய நேரத்தை வைத்து, அன்றைய நாளின் முழுமையான 24 லக்னங்களும் (நள்ளிரவு முதல் அடுத்த நாள் நள்ளிரவு வரை) முன்கூட்டியே கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.

திருமணம், கிரகப்பிரவேசம், புதிய தொழில் தொடங்குதல் மற்றும் முக்கியப் பிரயாணங்கள் மேற்கொள்ளும் போது நல்ல முகூர்த்த நேரத்தோடு, சரியான லக்னத்தையும் (Lagnam timing today) தேர்ந்தெடுத்துச் செய்வது அந்த காரியத்திற்கு நிலையான வெற்றியையும் லாபத்தையும் பெற்றுத் தரும்.

லக்னம் எப்படி கணக்கிடப்படுகிறது?

  • அன்றைய தினத்தில் சூரியன் எந்த ராசியில் இருக்கிறாரோ, அதுவே அந்த நாளின் முதல் லக்னமாக சூரிய உதயத்தின் போது அமையும்.
  • அதிநவீன வானியல் கணித முறை மற்றும் பாரம்பரிய திருக்கணிதப் பஞ்சாங்க அடிப்படையில் ஒவ்வொரு நொடியும் விண்வெளியில் லக்னம் நகரும் பாதையை வைத்து 100% துல்லியமாக இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
  • எனவே சரியான Indraiya Lagnam அறிய, தேடல் படிவத்தில் உங்கள் ஊரைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பது மிக மிக அவசியம்.

எங்களின் "இன்று (Live)" பட்டனை கிளிக் செய்வதன் மூலம், இந்த வினாடியில் உங்களுக்கு எந்த லக்னம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை மிகத் துல்லியமாக லைவ்-ஆக தெரிந்துகொள்ள முடியும்.

லக்னம் (Lagnam) - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. லக்னம் (Lagnam) என்றால் என்ன?

பூமியிலிருந்து பார்க்கும்போது கிழக்கு வானில் (Eastern Horizon) உதிக்கும் ராசியே லக்னம் எனப்படும். ஒரு நாளில் 24 மணி நேரத்தில் மொத்தம் 12 லக்னங்களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி மறையும்.

2. லக்ன நேரம் பார்ப்பது ஏன் அவ்வளவு முக்கியம்?

ஒரு காரியத்தை எந்த லக்னத்தில் தொடங்குகிறோமோ, அதைப் பொறுத்தே அந்த காரியத்தின் ஆயுளும் வெற்றியும் அமையும். உதாரணமாக, நிலையான காரியங்களுக்கு ஸ்திர லக்னமும், பயணங்களுக்கு சர லக்னமும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

3. திருமணத்திற்கு எந்த லக்னம் சிறந்தது?

திருமணம் நீண்ட காலம் நிலைத்து நிற்க ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்னங்கள் மிகவும் சிறந்தவை. இதைத் தவிர மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னங்களிலும் சுப முகூர்த்தங்கள் செய்யலாம்.

4. எந்தெந்த லக்னங்களில் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும்?

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய சர லக்னங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை என்பதால், நீண்ட காலம் நிலைக்க வேண்டிய காரியங்களான திருமணம், கிரகப்பிரவேசம் போன்றவற்றை இந்த லக்னங்களில் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

5. பயணம் செய்ய சிறந்த லக்னம் எது?

பயணம், இடமாற்றம், வாகனம் வாங்குதல் போன்ற விரைவாக நடக்க வேண்டிய காரியங்களுக்கு மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய சர லக்னங்கள் மிகவும் உகந்தவை.

6. ஒவ்வொரு லக்னமும் எவ்வளவு நேரம் இருக்கும்?

ஒரு லக்னத்தின் சராசரி நேரம் 2 மணி நேரம் ஆகும். ஆனால், பூமியின் சாய்வு காரணமாக ஊருக்கு ஊர் (அட்சரேகையைப் பொறுத்து) இது 1 மணி நேரம் 50 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை மாறுபடும். இதுவே ராசிமானம் எனப்படும்.

7. இன்றைய லக்ன நேரங்கள் தினமும் மாறுமா?

ஆம், ஒவ்வொரு நாளும் சூரியன் சுமார் 1 பாகை நகர்வதால், லக்னம் தொடங்கும் நேரமும் தினமும் சுமார் 4 நிமிடங்கள் முன்னோக்கி நகரும். எனவே தினசரி லக்ன நேரங்கள் மாறுபடும்.

8. பழைய அல்லது எதிர்கால தேதிகளுக்கு லக்னம் பார்க்க முடியுமா?

ஆம், எங்கள் இணையதளத்தில் உள்ள தேடல் படிவத்தைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் எந்தவொரு எதிர்கால அல்லது கடந்த கால தேதிக்கும் துல்லியமான லக்ன அட்டவணையைப் பெற முடியும்.

9. பிறந்த லக்னத்திற்கும் (Janma Lagnam), இன்றைய லக்னத்திற்கும் என்ன வித்தியாசம்?

ஒருவர் பிறக்கும் நேரத்தில் கிழக்கு வானில் உதித்துக் கொண்டிருக்கும் ராசியே பிறந்த லக்னம் ஆகும். இன்றைய லக்னம் என்பது தற்போது ஒவ்வொரு நேரத்திலும் என்ன லக்னம் நடக்கிறது என்பதைக் காட்டும் அமைப்பாகும்.

10. சுப காரியத்திற்கு லக்னம் மட்டுமே பார்த்தால் போதுமா?

போதாது. நல்ல லக்னத்தோடு சேர்த்து அன்றைய நாளின் நல்ல நேரம், கௌரி நேரம், திதி, நட்சத்திரம் மற்றும் முகூர்த்த நாளா என்பதையும் இணைத்துப் பார்ப்பதே முழுமையான நற்பலன்களைத் தரும்.